உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டிட விபத்து மின்னல் தாக்குதல், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில பேரிடர் மீட்புக்குழு ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, உத்திர பிரதேசத்தில் மேலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் லக்னோ, அமேதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: 3 நாள்கள் தொடர் கனமழை: குளம் போல் காட்சியளித்த ஹைதராபாத்...!