ETV Bharat / bharat

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த ஐநா

டெல்லி: காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க சீனா கோரிக்கை விடுத்த நிலையில், அது உள்நாட்டு பிரச்னை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என உறுப்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

காஷ்மீர் விவகாரம்
காஷ்மீர் விவகாரம்
author img

By

Published : Aug 6, 2020, 6:52 PM IST

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்றுவருகிறது. இதனிடையே, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க சீனா கோரிக்கை விடுத்தது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.

இது குறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறுகையில், "சிம்லா ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டிய மற்ற உறுப்பு நாடுகள், காஷ்மீர் விவகாரத்தை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தன. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது" என்றார்

  • Another attempt by Pakistan fails!

    In today’s meeting of UN Security Council which was closed, informal, not recorded and without any outcome, almost all countries underlined that J&K was bilateral issue & did not deserve time and attention of Council.

    — PR UN Tirumurti (@ambtstirumurti) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ரகசியமாக நடத்தப்பட்ட அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டை அமெரிக்கா எடுத்ததாகவும் அதன் பின் மற்ற நாடுகள் அதனை பின் தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா கோரிக்கை விடுத்திருந்தது.

காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் தொடர் முயற்சிகளை செய்துவந்தது. இருப்பினும், இந்திய தூதரகத்தின் முயற்சியால் அது தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காஷ்மீர் விவகாரம்: சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.