ETV Bharat / bharat

உன்னாவ் வழக்கு - ஆப்பிள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பிப்பு! - Apple unnao

டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நாளன்று, குற்றம்சாட்டப்பட்ட குல்தீப் சிங் எங்கிருந்தார் என்பதை அவர் பயன்படுத்திய செல்ஃபோன் நிறுவனமான ஆப்பிள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Unnao
author img

By

Published : Sep 29, 2019, 2:06 PM IST

உத்தரப் பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டில், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அம்மாநில முன்னாள் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வல்லுறவு செய்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குல்தீப் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அச்சிறுமியின் தந்தையும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால், காவலில் இருக்கும்போதே, அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அச்சிறுமி மற்றும் அவரது உறவினர்கள் சென்ற கார் லாரி மோதியதில் சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானது. அதை திட்டமிட்டு செய்தது குல்தீப் சிங் என்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையாக எழுந்தன. அதனால் பாஜக தலைமை அவரை பதவிநீக்கம் செய்தது. அதையடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அச்சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட நாளன்று குல்தீப் சிங் எங்கிருந்தார் என்பதை அவர் பயன்படுத்திய செல்ஃபோன் நிறுவனமான ஆப்பிள் அக்டோபர் 9ஆம் தேதிக்குள் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:

உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: அறிக்கை சமர்ப்பிக்க சிபிஐக்கு மேலும் 2 வாரம் அவகாசம்!

Intro:Body:

https://www.ndtv.com/india-news/unnao-rape-case-apple-gets-deadline-to-disclose-kuldeep-sengar-s-location-2108978?pfrom=home-topscroll

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.