ETV Bharat / bharat

ஒரே தொகுதியில் 8 முறை மக்களின் உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட பஸ்வான்! - பஸ்வானின் புதிய பாதை

மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், ஹாஜிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து எட்டு முறை மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றுள்ளார்.

ஒரே தொகுதியில் 8 முறை மக்களின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட பஸ்வான்...!

author img

By

Published : Oct 9, 2020, 8:19 AM IST

மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று (அக். 8) காலமானார். அவருக்கு வயது 74. பஸ்வான், ஒன்பது முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஐந்து முறை மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

ராம் விலாஸ் பஸ்வான் வாழ்க்கை வரலாறு:

  • பிகார், ககரியா மாவட்டத்தில் உள்ள சஹார்பாணி கிராமத்தில் ஜாமூன் பஸ்வானிற்கும் ஷியா தேவிக்கும் மகனாக 1946ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிறந்துள்ளார், ராம்விலாஸ் பஸ்வான். பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர், மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஆர்வமாக இருந்துள்ளார். அதனால், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிச இயக்கத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார்.
  • அதன் விளைவாய் காவல் துறை பணி கிடைத்தும், அந்தப் பணிக்குச் செல்லாமல் அரசியலில் இறங்கினார். பின்னர் 1969ஆம் ஆண்டு சம்யுக்த சோஷலிச கட்சி சார்பில், பிகாரில் தனித்தொகுதியில் போட்டியிட்ட பஸ்வான் முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.
  • அதுமட்டுமின்றி 1975ஆம் ஆண்டு நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது சிறை சென்ற அவர், 1977ஆம் ஆண்டு விடுதலையானார். பின்னர் அதேஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக மக்களவை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டு, நாடாளுமன்றம் சென்றார்.
  • இதுவரை ஹாஜிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து எட்டு முறை மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அதில் சில முறை அதிக வாக்குகளைப் பெற்றும் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து ஒரு தொகுதியில் வெற்றி பெறுவது என்பது மக்களுக்கு நாம் கடமையாற்றியதைத்தான் குறிக்கும். அப்படித்தான் தனது தொகுதி மக்களுக்காக பல முறை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.

பஸ்வானின் புதிய பாதை

  • 50ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த ராம் விலாஸ் பஸ்வான், 2000ஆம் ஆண்டில் 'லோக் ஜனசக்தி’ என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கினார் . ஜனதா தளம், காங்கிரஸ், பாஜக தலைமையிலான மத்திய அரசில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்த இவர், ரயில்வே, விவசாயம், தகவல் தொடர்பு என்று பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.
    மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்!

  • அதுமட்டுமின்றி, 1990-களில் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறார், ராம் விலாஸ் பஸ்வான். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், நாட்டின் பெரிய அரசியல் தலைவர்களுடன் களம் கண்டவர் ஆவார்.

இதையும் படிங்க...மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.