மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஒய்வூதியத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு மோடி ஒப்புதல் வழங்கினார். இதைத்தொடர்ந்து, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் புதிய கல்விக்கான வரைவு அறிக்கையை பொதுமக்கள் கருத்துக்காக வெளியிட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், "மத்திய பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜூன் 20 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்த உள்ளார். பொருளாதார சர்வே குறித்த அறிவிப்பு ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் "என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றிற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சில்லறை வணிகர்களுக்கு வழங்கும் ஓய்வூதியம் தொடர்பான திட்டத்திற்கும் ஒப்பதல் வழங்கப்பட்டுள்ளது", என்றார்.