நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகமுள்ள சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மாவோயிஸ்ட்டுகளை முடக்கி நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியலமைப்பு சட்டம் 370ஐ நீக்க அதிரடியாக முயற்சி எடுத்து வெற்றி கண்டார். இந்நிலையில், அவரின் அடுத்த பார்வை மாவோயிஸ்டுகள் தான் எனவும், அதனை முழுவதுமாக முடக்க பல முயற்சிகள் எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.