ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் 'Analytical Support and Sanctions Monitoring Team' என்ற குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றை சமீபத்தில் சமர்ப்பித்தது.
அதில், "பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பி வருகின்றன. இது ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதை அபாயத்தில் தள்ளியுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜுன்- 2ஆம் தேதி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, "பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி என்ற இந்தியாவின் நீண்ட கால நிலைபாட்டை இந்த அறிக்கை நிரூபணமாக்கியுள்ளது. பயங்கரவாத குழுக்கள் என அறிவிக்கப்பட்ட பல அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் தந்துவருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு!