உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் தங்களையும் மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச அமைப்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மனு அளித்துள்ளது.
மேலும் அந்த மனுவில், “சிறுபான்மையினருக்கு குடியுரிமை கிடைப்பதை ஐ.நா. வரவேற்கிறது. இருப்பினும் இதில் சில மக்களுக்கு (ஹசாரா, அகமதியா, ஷியா) குடியுரிமை கிடைக்கவில்லை” என கூறியிருந்தது.
அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலுக்குள்ளாகி 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை கிடைக்கும்வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது.
இந்தச் சட்டம் இஸ்லாமியர் நீங்கலாக குடியுரிமை வழங்க வழிவகைசெய்கிறது. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவுக்கு 50 லட்சத்து 87 ஆயிரம் பேர் அகதிகளாக வந்துள்ளனர். அவர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிராக ஐநா வழக்கு: சாடிய பாஜக!