இங்கிலாந்தில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகளுடன் இணைந்து கரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி 30 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை 750 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஈட்டியுள்ளது. இதற்கிடையில், 2020ஆம் ஆண்டு முடிவிற்குள் 400 மில்லியன் (40 கோடி) தடுப்பூசியை தயாரித்து நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கும் வழங்குவோம் எனவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் இதுபற்றி கூறுகையில், “இப்போதே தடுப்பூசிகளை தயாரிக்க தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் தடுப்பூசி பயனுள்ளது என்பதை நிரூபிக்க முடியும்.
இந்தத் தடுப்பூசி பற்றிய முடிவுகள் வெளியாகும் நேரத்தில் அதைப் பயன்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றார். இந்நிறுவனம், முதல்கட்டமாக 20 கோடி தடுப்பூசி மருந்துகளை தயாரித்து விநியோகிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
நிச்சயமாக இது முடிவு ஆபத்தான முடிவுதான். ஏனெனில், தடுப்பூசி முடிவு சரியாக வேலை செய்யாவிட்டால் அனைத்தும் இழப்பாகி விடும். அதே நேரத்தில் கரோனா தொற்று நோய் பரவி வரும் காலத்தில் லாபம் ஈட்டுவதை கவனம் செலுத்த மாட்டோம் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: " தலைவி டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடி - OTT வெளியீடு வாய்ப்பில்லை" - கங்கனா !