உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷஹர் மாவட்டத்தில் இருக்கும் பகோனா கிராமத்தில் உள்ள கோயிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சாதுக்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இருவரும் கோயிலில் நீண்ட காலமாக, தங்கி சேவையில் ஈடுபட்டு வந்தவர்கள்.
இந்தக் கொலை தொடர்பான முதல்கட்ட விசாரணையில், சிவமந்தீரின் நாக்கை திருடிச் சென்ற இளைஞனுக்கு சாதுக்கள் ஆட்சேபனை தெரிவித்ததால், அவர்கள் இருவரும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்த கிராம மக்கள், அந்த இளைஞரை சிறைப்பிடித்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கொல்லப்பட்ட சாதுக்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் பார்க்க: விஸ்வரூபம் எடுத்துள்ள OTT பிரச்னை - தமிழ் சினிமாவுக்கு வளர்ச்சியா? தடையா?