மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அம்மாநில அரசியல் குழப்பங்கள் அடுத்தக்கட்டத்தை எட்டின. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் அஜித் பவார் அக்கட்சித் தலைவர் சரத் பவாரின் எண்ணத்துக்கு மாறாக பாஜகவுடன் கைகோர்த்து கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறிவருகிறார்.
அஜித் பவாரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலர் தனி விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுவந்தது.
இந்நிலையில், மாயமாக இருப்பதாகக் கூறிய 4 தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களில் அனில் பவார், தௌளத் தோத்ரா என்ற இரண்டு பேரை அக்கட்சித் தலைவர்கள் டெல்லியில் மீட்டுள்ளனர்.
அஜித் பவார் பதவியேற்பின்போது அவருடன் இருந்த இருவரும், அதன்பின் டெல்லி விரைந்து குர்கான் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர். தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர்களால் அதிரடியாக மீட்கப்பட்டு மும்பைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
இதையும் படிங்க: ஜார்க்கண்டில் பிரதமர் மோடி இன்று பரப்புரை!