கரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், இன்று தெலங்கானா சுகாரதாரத் துறை அமைச்சர் ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "தற்போது தெலங்கானாவில் மேலும் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்கள் இருவரும் லண்டனிலிருந்து சமீபத்தில் தான் வந்திருந்தனர். இதனால், தெலங்கானாவில் கரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது" என்றார். இதில், ஒருவர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா ஆய்வு: 18 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி