ஜம்மு - காஷ்மீரின் ட்ரால் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 14) பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். சுதந்திர தினத்திற்கு முன்னதாக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட ரோந்து பணியின்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த பதுங்குக்குழி ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர்.
அங்கு பதுங்கியிருந்த ரேயாஸ் அகமது பட், முகமகு உமீர் ஆகிய இருவரை ஜம்மு - காஷ்மீர் காவல்துறை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடிபொருள்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய காவல்துறையினர், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, புல்வாமா பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த அசாத் லஹாரி என்பவர் கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க: லெபனானுக்கு நிவாரணப் பொருள்களுடன் இந்தியாவிலிருந்து புறப்பட்ட விமானம்!