கடந்த வாரம் ஐரோப்பாவிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு விமானம் மூலம் வந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்தது.
தொற்று பாதித்த முதல் நபர் ஃபிரான்ஸ் நாட்டு பாரிஸ் நகரிலிருந்து, டெல்லி, ஹைதராபாத் வழியாகத் தனது சொந்த ஊரான கிருஷ்ணாவுக்கு வந்துள்ளார். 24 வயதான அந்நபர் கடந்த மார்ச் 17ஆம் தேதி வந்துள்ள நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என சுகாதாரச் செயலர் ஜவஹர் ரெட்டி தனது அறிக்கையில் வெளியிட்டார்.
கரோனா தொற்று பாதித்த மற்றொரு நபர் லண்டனிலிருந்து மார்ச் 18ஆம் தேதி ராஜமஹேந்திரவரத்திற்கு வந்துள்ளார். அவருக்கு 22 வயது எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆந்திராவில் முதல் கரோனா தொற்று நெல்லூரிலும், மற்ற பாதிப்பு ஆங்கோல், விசாகாபட்டினத்தில் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க... வெளிநாடுகளிலிருந்த சென்னை வந்த 56 பேருக்கு கரோனா அறிகுறியா? - மருத்துவமனையில் அனுமதி