ETV Bharat / bharat

பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரம்: நித்தியானந்தா ஆசிரமத்தில் இருவர் கைது! - பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரம்

காந்திநகர்: பெண் குழந்தைகள் கடத்தப்பட்ட வழக்கில் நித்தியானந்தா ஆசிரமத்தில் வேலை செய்யும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Nithyananda
author img

By

Published : Nov 21, 2019, 11:06 PM IST

குஜராத் உயர் நீதிமன்றத்தில், ஜனார்த்தனா சர்மா என்பவரும் அவரின் மனைவியும் நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள தங்களின் குழந்தைகளை மீட்டு தருமாறு மனு தாக்கல் செய்திருந்தனர். இதுகுறித்து மனுவில், "7 - 15 வயதுடைய எனது நான்கு பெண் குழந்தைகளை 2013ஆம் ஆண்டு நித்தியானந்தா நிறுவிய கல்வி நிலையத்தில் சேர்த்தேன். தற்போது அவர்கள் அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தாவின் மற்றொரு ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்திக்க முயற்சித்தோம். குழந்தைகளை சந்திக்க கல்வி நிலையத்தின் அலுவலர்கள் மறுப்பு தெரிவித்தனர்" என குறிப்பிடப்பட்டது.

காவல்துறையின் உதவியோடு இரு பெண் குழந்தைகளை சந்தித்துவிட்டதாகவும், ஆனால், லோபமுத்ரா, நந்திதா ஆகியோர் தங்களைச் சந்திக்க வரவில்லை எனவும் பெற்றொர் தெரிவித்திருந்தனர். தங்களின் பெண் குழந்தைகளை கடத்தி தூக்கமின்றி இரு வாரங்களாக வைத்துள்ளதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குஜராத் காவல் துறையினர் நித்தியானந்தா ஆசிரமத்தில் பணிபுரியும் இருவரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நித்தியானந்தா வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கொல்கத்தாவில் பணமழை!

Intro:Body:

Nithyananada

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.