ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு களப்பணியாளர்கள், இன்று (செப். 15) பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அல்-பத்ர் அமைப்புக்கு நிதியளிப்பதற்காக ஆறு லட்சம் ரூபாய் வைத்துள்ளது தெரியவந்தது.
காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் மற்றும் பாதுகாப்புப் படையினர் இன்று காலை லாதூ கிராசிங்கில் தங்கியிருந்த இரண்டு பேரையும் கைதுசெய்தனர்.
இருவரும் சோபியான் மாவட்டத்திலிருந்து புல்வாமாவில் உள்ள க்ரூ பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் ராயீஸ்-உல்-ஹசன், முஷ்டாக் அஹ்மத் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய், தடைசெய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. மேலும், இவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.