பாரதப் பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பு கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் நடக்கிறது. இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்கவுள்ள நிலையில் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாமல்லபுரத்துக்குச் சென்று அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் இன்று சந்தித்துக் கொள்கின்றனர். இதையொட்டி சீன அதிபர் ஸி ஜின்பிங் இந்தியா வந்துள்ளார்.
அவருக்கு ஆதரவாக, 'வரவேற்கிறோம் ஸி ஜின்பிங்' என்ற ஹேஸ்-டேக் டிரெண்டாகிவருகிறது. அதேசமயத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக 'திரும்பிப் போ' என்னும் வகையில் #GoBackModi என்ற வசனமும் டிரெண்டாகிவருகிறது. இதே வசனம் சீன மொழியிலும் டிரெண்டாகிவருகிறது.
இதையும் படிக்கலாமே
Xi-Modi meet: சீனா-இந்தியா உறவு எப்படி இருக்கிறது ?