ETV Bharat / bharat

ஊரடங்கிலும் டியூஷன்... போலீஸை மாஸ்டர் வீட்டிற்கே அழைத்துச் சென்ற சிறுவன்!

சண்டிகர்: ஊரடங்கில் டியூஷன் சென்ற சிறுவனை காவல் துறையினர் விசாரித்ததில், டியூஷன் மாஸ்டர் வீட்டிற்கே துணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை அழைத்துச் சென்ற சிறுவனின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

dsd
sds
author img

By

Published : Apr 27, 2020, 1:19 PM IST

பஞ்சாப்பில் குர்தாஸ்பூர் (Gurdaspur) மாவட்டத்தில், படாலா பகுதியில் சுற்றித்திரியும் மக்களைக் கண்காணிப்பதற்கு காவல் துறையினர் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது, சாலையில் ஒருவருடன் வந்த இரண்டு சிறுவர்களைத் தடுத்து நிறுத்தி, காவல் துறையினர் விசாரித்தனர்.

சிறுவன் உடனடியாக காவலர்களிடம் டியூஷன் சென்று வருவதாகவும், டியூஷன் மாஸ்டரின் வீட்டு முகவரி வரை கூறியுள்ளான். இதைக் கேட்ட துணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குர்தீப் சிங், "வா நீயே வீட்டைக்காட்டு" எனச் சிறுவனை அழைத்துச் சென்றார்.

போலீஸை மாஸ்டர் வீட்டிற்கே அழைத்துச் சென்ற சிறுவன்

காவல் துறையினருடன் வீரநடை போட்டு நடந்து சென்ற 5 வயது சிறுவன், மாஸ்டரின் வீட்டின் முன்பு ஸ்டாப் ஆனான். இதுமட்டுமின்றி மாஸ்டரின் வீட்டுக் கதவைத் தட்டி, அவர்களையும் வெளியே வரவழைத்தான்.

இதைத் தொடர்ந்து, துணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் குர்தீப் சிங், ஊரடங்கில் டியூஷன் எடுப்பது தவறு என அவர்களுக்கு அறிவுரை கூறினார். இதே போல், சிறுவனுடன் வந்த உறவினரையும் துணை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெளுத்து வாங்கினார்.

ஊரடங்கில் பள்ளிகளே மூடியுள்ள நிலையில், டியூஷன் அனுப்புவது முக்கியமா என சரமாரி கேள்விகளைக் கேட்டது மட்டுமின்றி, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது எனவும் எச்சரித்து அனுப்பினார்.

இதையும் படிங்க: பெண்ணை கரண்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.