ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில் சில மாநிலங்களில் கோயில்கள் திறக்கப்பட்டுவருகின்றன. இந்த வரிசையில் கரோனா பொது முடக்க தளர்வுகளுக்குப் பின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 8ஆம் தேதி முதல் சோதனைமுறையில் இரண்டு நாள்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர்வாசிகளை தரிசனம்செய்ய அனுமதித்தனர்.
நேற்றுமுதல், நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்து 750 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதில் துணை ஆட்சியர் தகுதியுள்ள (கேடர்) வி. தேவேந்திர ரெட்டி, தேவஸ்தானத்தின் முக்கியத் தகவலை ஊடகத்திற்கு வெளியிட்டதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திர அரசிடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்ததால், தேவேந்திர ரெட்டி ஆறு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மோடி பிரதமரான பின்பு இருதரப்பு உறவுகள் மோசமடைந்தது ஏன்? அசோக் கெலாட் கேள்வி