ETV Bharat / bharat

மோடி, ட்ரம்ப் இருவருக்கும் ஒரே சித்தாந்தம்தான்: சீதாராம் யெச்சூரி!

புதுச்சேரி: இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவருக்கும் ஒரே சித்தாந்தம் என்பதால்தான் அமெரிக்காவில் மோடி பிரசாரம் செய்கிறார் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியுள்ளார்.

சீதாராம் யெச்சூரி
author img

By

Published : Sep 25, 2019, 11:08 PM IST

மாநில உரிமைகளும் மக்கள் விரோத மசோதாக்களும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, டி.கே. ரங்கராஜன் எம்.பி, தமிழ்நாடு சிபிஐஎம் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய சீதாராம் யெச்சூரி, ’பிரதமர் இந்த தேசத்தில் உள்ள மக்களின் நலனைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வர பிரசாரம் செய்து வருகிறார். மோடி அரசு எவ்வாறு இந்தியாவில் இருக்கிறதோ, அவ்வாறு தான் அமெரிக்காவில் ட்ரம்ப் அரசு உள்ளது.

சீதாராம் யெச்சூரி

இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால் இந்திய பிரதமர் அமெரிக்கா சென்று அங்கு அதிபராக டிரம்ப் மீண்டும் வர வேண்டும் என பிரசாரம் செய்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடி இருவருக்கும் ஒரே சித்தாந்தம் என்பதால்தான் அமெரிக்காவில் மோடி பிரசாரம் செய்து வருகிறார்.

இந்தியாவில் மாண்புகளை சீர்குலைக்கும் விதத்தில் மத்திய மோடி தலைமையிலான அரசு கட்டவிழ்த்துவிடக்கூடிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்’ என்றார்.

இதையும் படிங்க: #howdymodi முத்த மழையில் நனைந்த நரேந்திர மோடி...!

Intro:இந்தியாவில் மாண்புகளை சீர்குலைக்கும் விதத்தில் மோடி அரசு கட்டவிழ்த்து விடக்கூடிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த சவால்களை சந்திக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம் என்று புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி இவ்வாறு பேசினார்

Body:மாநில உரிமைகளும் மக்கள் விரோத மசோதாக்களும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் டி கே ரங்கராஜன் எம்பி புதுச்சேரி மாநில அக்கட்சி செயலாளர் ராஜாங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கருத்தரங்கில் பேசிய அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி

கலாச்சார மதிப்பீடுகளை எல்லாம் கணக்கில் எடுக்கும் போது மரபு என்பதை பாதுகாக்கப்படவேண்டும் இந்தியாவில் மாண்புகளை சீர்குலைக்கும் விதத்தில் மோடி அரசு கட்டவிழ்த்து விடக்கூடிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த சவால்களை சந்திக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நான் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றார்

பிரதமர் இந்த தேசத்தில் உள்ள மக்களின் நலனைப் பற்றி எந்த கவலையும் படாமல் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக அங்கு வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்ய மோடி அங்கு சென்று உள்ளார்
மோடி அரசு இந்தியாவில் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ட்ரம்ப் அரசு அமெரிக்காவில் உள்ளது

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் யாராவது வெளிநாட்டிலிருந்து வரவழைக்க முடியுமா சமீபத்தில் பங்களாதேசம் சேர்ந்த நட்சத்திரம் மேற்கு வங்காளத்தில் பிரச்சாரத்திற்கு வந்தபோது அது தடுக்கப்பட்டது ஏனென்றால் இந்தியாவுடைய ஜனநாயகக் சார்ந்த தேர்தல் போன்ற உள்நாட்டு விஷயத்தில் வெளிநாட்டவர் தலையிட கூடாது என்று அது நிராகரிக்கப்பட்டது

இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது ஆனால் இந்திய பிரதமர் அமெரிக்கா சென்று அங்கு யார் அதிபராக வேண்டும் என்று அவர் டிரம்ப் காக பிரச்சாரம் செய்கிறார்

டிரம்புகாக மோடி ஏன் பிரச்சாரம் செய்கிறார் என்று பார்த்தால் இருவருக்கும் சித்தார்த்தும் ஒன்றுதான்

மக்களைப் பிரிகிற பிளவு படுத்துகின்ற அந்த சித்தாந்தம் என்பது இருவருக்கும் ஒன்றுதான் வெறுப்பை உருவாக்கி சித்தாந்தமாக இருவருக்கும் ஒன்றுதான் எனவேதான் அமெரிக்காவில் அங்கு மோடி பிரச்சாரம் செய்தார் அதே நேரத்தில் இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருந்தனர் இந்திய பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருந்தது என்றும் அவர் பேசினார்

இந்தியாவில் இமாச்சல ம் ,உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் வெளியிலிருந்து யாரும் இடம் வாங்க முடியாது இவற்றை மறைத்து ஜம்மு-காஷ்மீரில் மட்டும் நிலம் வாங்க முடியாது என்று பாஜக அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது மேலும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க சிறப்பாக செய்து வருகின்றனர்

Conclusion:இந்தியாவில் மாண்புகளை சீர்குலைக்கும் விதத்தில் மோடி அரசு கட்டவிழ்த்து விடக்கூடிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த சவால்களை சந்திக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம் என்று புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி இவ்வாறு பேசினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.