மேற்கு வங்கம் மாநில பிர்பம் மாவட்டம் போர்பந்த் பகுதியில் உள்ள பழுங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கியது அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவர் தற்போது தனியாக வசித்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி மாலை அவர் அப்பகுதியில் ஒருவரை சந்திக்கச் சென்றார். பின்னர், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை தடுத்து நிறுத்தியது. அவரை ஆள் இல்லாத இடத்துக்கு இழுத்துச் சென்ற கும்பல், கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியது.
இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். காயமடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், ஐந்து பேருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கணவரின் அதீத காதல்... சண்டையே போடமாட்டேங்குறாரு' - விவாகரத்து கேட்ட மனைவி!