கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய சுகாதாரத் துறை பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒருகட்டமாக ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை இந்தியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது இந்தியக் குடியுரிமை பெற்ற பயணிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள், 14 நாள்களுக்கு கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர். மார்ச் 31ஆம் தேதி வரை இந்த உத்தரவு தொடரும்.
இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், 13 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இருவர் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், கேரளா, லடாக் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மேலும் நான்கு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: கரோனா பயத்தால் வயதான தம்பதியை வீட்டில் பூட்டிய அக்கம்பக்கத்தினர்