பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள இந்திய விமானப்படையில், தேசிய கேடட் கார்ப்ஸ் படை வீரர்கள், இரண்டை இருக்கை கொண்ட விமானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். அதில், எஸ்.டபிள்.யூ 80 ரக விமானம் புறப்பட்ட உடனேயே திடீரென விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் சென்ற தளபதி ஜி.எஸ்.சீமா என்பவர் உயிரிழந்தார். மற்றொருவரான விபின் குமார் யாதவ் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். விபத்துக்கான காரணத்தை அறிய ஐஏஎஃப் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதையும் படங்க: ஜப்பான் செல்கிறது இந்திய விமானப்படை விமானம்