Latest National News - தெலங்கானாவிலுள்ள விகராபாத் மாவட்டத்தின் அருகேயுள்ள கிராமத்தில் இன்று மதியம் 12 மணியளவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தைச் செலுத்திய ஒரு பெண் விமானி உட்பட இரண்டு பயிற்சி விமானிகளும் பலியாகினர்.
விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனாலும் இந்த விபத்து நிகழ்ந்தபோது அப்பகுதியில் கடும் மழை பெய்துகொண்டிருந்தது. விபத்துள்ளன விமானம் அருகிலுள்ள ஒரு தனியார் விமான பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்கள் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிக்கலாமே: மேலே உணவு... கீழே தண்ணீர்... பெங்களூருவின் புதிய உணவகம்!