ETV Bharat / bharat

புதுச்சேரியில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தர்ணா போராட்டம்! - Dharna Protest

புதுச்சேரி: போக்குவரத்து வரியை உடனடியாக ரத்து செய்யக் கோரி சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அரசு போக்குவரத்துறை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tourist Travels Owners Dharna Protest In Pudhucherry

author img

By

Published : Sep 25, 2020, 3:39 AM IST

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாகச் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆனால், சாலை வரி உள்ளிட்ட போக்குவரத்து வரிகளை கட்ட வேண்டும் என புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை அறிவித்தது.

இதனிடையே, வருமானம் இல்லாமல் சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சாலை வரி உள்ளிட்ட வரிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வரியை தள்ளுபடி செய்ய கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அரசு போக்குவரத்து துறை அலுவலக ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால், உரிய முடிவு எட்டப்படாததால் அனைவரும் போக்குவரத்து துறை வாயில் கதவை இழுத்து மூடி தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் போக்குவரத்து வரிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவலறிந்து அங்கு அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் காரணமாக ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.