ETV Bharat / bharat

சுட்டு வீழ்த்தப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா முக்கிய பயங்கரவாதி!

author img

By

Published : Aug 18, 2020, 2:57 PM IST

Updated : Aug 18, 2020, 3:14 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறையின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைமை இயக்குநர்

வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி தரும் வகையில், பாதுகாப்புப் படை நடத்திய எதிர்த் தாக்குதலில் அமைப்பின் முக்கியப் படைத்தளபதி உள்பட மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பபட்டனர். தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், அதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்ததாகவும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.

படுகாயம் அடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் தலைமை இயக்குநர் தில்பாக் சிங் கூறுகையில், "வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு வீரர்களும், காவல் சிறப்பு அலுவலர் ஒருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த வீரர்களின் பெயர் லோகாஷ் சர்மா, குர்ஷித் கான் என்பது தெரியவந்துள்ளது. காவல் சிறப்பு அலுவலரின் பெயர் முசாபர் அகமது என்பதும் அவர் பதான் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டுவரும் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரான சஜத் ஹதியார் தாக்குதலில் உயிரிழந்தார். 20 இளைஞர்களை இவர் பயங்கரவாத அமைப்பில் சேர்த்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி

Last Updated : Aug 18, 2020, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.