ETV Bharat / bharat

கொல்கத்தாவில் ஊரடங்கை மீறி கம்யூனிஸ்ட் தலைவர்கள் போராட்டம்! - தேசிய செய்திகள்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஊரடங்கு உத்தரவை மீறிப் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர்.

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள்

author img

By

Published : Apr 19, 2020, 12:08 AM IST

ஊரடங்கு உத்தரவை மீறி, மக்களுக்குப் பொருட்கள் விநியோகிப்பதில் மேற்கு வங்க மாநிலத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று பரிசோதனை செய்யக்கோரியும் அம்மாநிலச் செயலாளர் சூர்யா காந்தா மிஸ்ரா உள்ளிட்ட உயர்மட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள், கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர், அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனர்.

மாநிலத்தின் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேஷன் முறையில் சீராகப் பொருட்களை வழங்கக் கோரி போராட்டம் நடத்திய அவர்கள், ஏழை மக்கள் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் பெரும்பான்மையான இடங்களில் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர் என்றும், மம்தா அரசு இவற்றை மறைப்பதிலேயே கவனம் செலுத்துகிறது என்றும் வேதனைத் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேற்கு வங்க மாநில நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்த அவர்கள், கரோனா தொற்று பரவலைத் தடுக்க அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஊரடங்கு உத்தரவை மீறிப் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். இருப்பினும், இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து காவல் துறையினர் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து வேன்களில் ஏற்றிச் சென்றனர்.

இதுகுறித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான முகமது சலீம், தாங்கள் தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் காவல்துறையே தங்களைத் தடுத்து விதிகளை மீறியதாகவும் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில், பொருட்கள் பொது விநியோகம் செய்யப்படுவதில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மூவர்ணக் கொடி போர்த்திய ஆல்ப்ஸ் மலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.