உத்தரபிரதேசம் மாநிலம் கவுதம்புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய்பாட்டி. இவரும், பாஜக மண்டல தலைவருமான சஞ்சீவ் ஷர்மா என்பவரும் தங்களது ஆதரவாளர்களுடன் நொய்டா-யமுனா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
ஜாவர் பகுதியில் உள்ள சுங்கச் சாவடி அருகே சென்ற போது, ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். கட்டணம் கொடுக்க மறுத்த சஞ்சீவ் ஷர்மா, ஆளும் கட்சியான எங்களிடமா கட்டணம் கேட்கிறாய் என சுங்கசாவடி ஊழியரை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றார்.
பின்னர் இதுகுறித்து அந்த ஊழியர் ஜாவா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பாஜக மாவட்ட தலைவர் குடிபோதையில் கட்டணம் செலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுங்கசாவடியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.