உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியோடு சேர்த்து,கேரளாவின் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோனி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தான் போட்டியிடுவதற்கான காரணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பாஜக அரசு தென் இந்தியா என ஒன்று இருப்பதை மறந்துவிட்டு செயல்படுவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை தென் இந்திய மக்கள் விரோதியாக பார்ப்பதினாலும், மக்களவைத் தேர்தலில் தென் இந்தியவில் ஒரு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்ததனால், கேரளாவின் வயநாடு தொகுதியில் நிற்பதற்கு முடியுசெய்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தென் இந்திய மக்கள் இந்தியாவிடம் இருந்து தனிமைப்படுத்தபடவில்லை என்பது தற்போது அவர்களுக்கு புறிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.