புதுச்சேரி ரயில்வே நிலையத்தில் வெளிமாநில ரயில்வே போக்குவரத்து அதிகரித்து வருவதால் வெளிமாநில பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதினால் தீவிர கண்காணிப்பில் முக்கிய கவனம் செலுத்துவது மேலும் குற்றச்செயல்களை தடுப்பது குறித்து ரயில்வே காவலர்களுடன் புதுச்சேரி காவல்துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் மாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புதுச்சேரியில் ரயில் வழியாக எளிதில் நுழையாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது, வெளி மாநிலத்து பிச்சைக்காரர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை ரயில் மூலம் புதுச்சேரிக்கு அனுப்பிவிடுவதை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக உள்ளூர் காவல்துறையினரின் உதவிகள் தேவைகள் என்னென்ன என்பது குறித்து ரயில்வே காவலர்களுக்கு கோரப்பட்டது. இதையடுத்து ரயில்வே நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவது, ஸ்கேனிங் மிஷின் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது
பின்னர் ரயில்வே ஊழியர்களை சந்தித்த மாநில வடக்கு எஸ்பி மாறன், ரயில்வே நிலையத்தில் குற்ற செயல்கள் நடப்பதை தடுக்க காவல்துறையுடன் ஒத்துழைக்குமாறு வலியுறுத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுச்சேரி ரயில்வே துறையினர் புதுச்சேரி, மாநில காவல்துறையினர் கலந்து கொண்டனர்.