ETV Bharat / bharat

எங்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்து முடக்க நினைக்கிறார்கள் - ரங்கசாமி குற்றச்சாட்டு - RANGASAMY

புதுச்சேரி: ஆட்சி நிலைத்திருக்க எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது பொய் வழக்குப்போட்டு தகுதிநீக்கம் செய்யலாமா? என்ற சிந்தனையில் ஆளும்கட்சியினர் உள்ளதாக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேர்தல் பரப்புரையின்போது குற்றஞ்சாட்டினார்.

NR Congress leader rangasamy election campaign
author img

By

Published : Apr 15, 2019, 5:56 PM IST

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் மக்களவை வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்தும், தட்டாஞ்சாவடி பகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் நெடுஞ்செழியனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார். அப்போது, புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வதால் கட்சி பலம்பெறும் என்றார்.

என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேர்தல் பரப்புரை
மேலும் அவர், ‘காங்கிரஸ் கட்சியினர் மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஆட்சியில் நிலைத்திருக்க சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்வது குறித்து யோசித்துவருகின்றனர். எங்கள் மீது பொய் வழக்குப் போடலாமா என்ற சிந்தனையிலும் அவர்கள் உள்ளனர். அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் மக்களைப் பற்றிச் சிந்திக்காமல், திட்டங்களைச் செயல்படுத்தாமல் செயலற்ற அரசாக காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது’ என்று குற்றம்சாட்டினார்.

Intro:ஆட்சியை நிலைத்திருக்க எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள மீது பொய் வழக்கு போட்டு தகுதி நீக்கம் செய்யலாமா என்ற சிந்தனையில் உள்ளனர் என்று என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டினார்

Body:புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளர் கே நாராயணசாமி ஆதரித்து தட்டாஞ்சாவடி பகுதியில் இடைத் தேர்தல் வேட்பாளர் நெடுஞ்செழியன் பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஔவையார் நகர்,நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வேன் மூலம் ரங்கசாமி பரப்புரை நிகழ்த்தினார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வதால் கட்சி பலம் பெறும் என்றார் .

காங்கிரஸ் கட்சியினர் மக்களைப் பற்றி சிந்திக்காமல் ஆட்சியில் நிலைத்திருக்க சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செய்வது குறித்து அவர்கள் மீது பொய் வழக்கு போடலாமா என்ற சிந்தனையில் உள்ளனர்

அரசுக்கும் கவர்னருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் மக்களைப் பற்றி சிந்திக்காமல் திட்டங்களை செயல்படுத்தாமல் செயலற்ற அரசாக காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது என்று என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பிரச்சாரத்தின் போது இவ்வாறு பேசினார் இந்த பிரச்சாரத்தின் போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடன் சென்றனர்

Conclusion:ஆட்சியை நிலைத்திருக்க எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள மீது பொய் வழக்கு போட்டு தகுதி நீக்கம் செய்யலாமா என்ற சிந்தனையில் உள்ளனர் என்று என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றம்சாட்டினார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.