ETV Bharat / bharat

மீனவர் பிரச்னையில் இலங்கை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தொய்வு - central goverment

புதுச்சேரி: மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசு, இலங்கை அரசுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி மீனவர் பேரவைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார்.

மீனவர் பேரவை தலைவர் இளங்கோ
author img

By

Published : Jun 24, 2019, 1:25 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேசிய மீனவர் பேரவை எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக மத்திய அரசு விவசாய அமைச்சகத்தில் இருந்து மீனவள அமைச்சகம் என்று தனியாக பிரித்து தனித் துறையை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக மத்திய அரசிற்கு தேசிய மீனவர் பேரவை, மீனவர் சமுதாயத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர் பேரவை தலைவர் இளங்கோ செய்தியாளர்கள் சந்திப்பு

அதேபோல் புதுச்சேரி, தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைந்து இந்தப் பிரச்னையை பேசி உரிய தீர்வு காண வேண்டும். மேலும் மீனவர்கள் சுருக்கு வலை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்' என்றார்.

Intro:தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்யப்படுவது பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு நடத்திவந்த பேச்சுவார்த்தை தொய்வு ஏற்பட்டுள்ளது என்று மீனவர் பேரவை குற்றம்சாட்டியுள்ளது

Body:தேசிய மீனவர் பேரவை தலைவர் முன்னாள் எம்எல்ஏ இளங்கோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

தேசிய மீனவர் பேரவை தொடர் முயற்சி நாளும் மீனவர் களின் ஒருமித்த கோரிக்கையை ஏற்றும் விவசாய அமைச்சகத்தில் இருந்து தனியாக பிரித்து எடுத்து மீன் வள அமைச்சகம் ஏற்படுத்திய மத்திய அரசுக்கு மீனவ சமுதாயத்தின் சார்பில் தேசிய மீனவர் பேரவை சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார் மீனவர் பேரவை சார்பில் மத்திய அரசுக்கு மத்திய விவசாய அமைச்சர் இதில் இருந்து பிரித்து மீன் வள அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தோம் அதனை கடந்த 5 ஆண்டு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் வலியுறுத்தப்பட்டு வந்தது

இதையடுத்து இக்கோரிக்கைகளை ஏற்று கடந்த ஜூன் 17ஆம் தேதி இட்ட மத்திய அரசின் அரசாணை படி மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் என்ற பெயரில் அமைச்சகம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது எனவே மத்திய அரசுக்கு அனைத்து மீனவர்கள் சார்பில் தங்கள் பேரவையின் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கையை தொடர்பான மத்திய அரசு இலங்கை அரசுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தை தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது அரசு பேச்சுவார்த்தையில் நடத்தி சுமூக முடிவு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் மீனவர்கள் சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசும் ,மாநில அரசும் மீனவர்கள் நலன் கருதி சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

பேட்டி இளங்கோ தேசிய மீனவர் பேரவை

Conclusion:தமிழக புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு நடத்திவந்த பேச்சுவார்த்தை தொய்வு ஏற்பட்டுள்ளது என்று மீனவர் பேரவை குற்றம்சாட்டியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.