புதுச்சேரியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால், கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது தண்ணீர் தேங்கியது. இதனால் வீடுகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மழை தொடங்குவதற்கு முன்பே ஆங்காங்கே உள்ள ஏரி குளங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள், பாதாள சாக்கடைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் இன்று காலை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மழைநீர் செல்வதற்கு ஏதுவான பாதைகளை சரிவர தூர்வாரப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டார். தொடர்ந்து நகரின் முக்கிய கழிவுநீர் பாதையான பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட வாய்க்காலை பார்வையிட்டார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக கழிவுநீர் கடந்து கடலுக்கு செல்கின்றன. அதனை பொதுப்பணித்துறையினர் சரிவர பராமரித்து வருகின்றனரா, என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.