தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசிய ஆளுநர், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், எழுவர் விடுதலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலக விவகார மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துப் பேசினார்.
அதேபோல் இன்று (வியாழக்கிழமை) காலை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த ஆளுநர் தமிழ்நாடு சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜஸ்தான், ஒடிசா மாநில முதலமைச்சர்களுக்கு பழனிசாமி கடிதம்!