தமிழ்நாடு - கேரள மாநிலங்களுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு, பரம்பிகுளம் - ஆழியாறு நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரளா சென்றுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நதிநீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கடந்த 15 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் கேரள செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் 2004ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும், கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியும் நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதையும் படிங்க: நதிநீர் பங்கீட்டில் கேரளம் மீது கரிசனம் - நெல் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை