ETV Bharat / bharat

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்கு!

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மவுவா மெளத்திரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

SC
SC
author img

By

Published : Dec 13, 2019, 3:26 PM IST

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி எதிர்க்கட்சியினர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருந்தபோதிலும், 311 உறுப்பினர்களின் ஆதரவோடு மக்களவையில் டிசம்பர் 9ஆம் தேதியும் 125 உறுப்பினர்களின் ஆதரவோடு மாநிலங்களவையில் டிசம்பர் 11ஆம் தேதியும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களை மக்கள் போராட்டக் களமாக மாற்றினர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மவுவா மெளத்திரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மெளத்திராவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, நீதிமன்ற பதிவாளரை அணுகுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: எரியும் அஸ்ஸாம்!

Intro:Body:

TMC MP Mahua Moitra moves SC challenging Citizenship (Amendment) Act

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.