கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 2019-20 ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரி வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல், 2018-19 ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ஆம் தேதி கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.