ETV Bharat / bharat

கரோனா காலத்தில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்! - சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விற்றவர்‘

கரோனாவைப் பயன்படுத்தி அதிரவைக்கும் சைபர் குற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அதுகுறித்த பார்வை.

Thriving cyber criminals
Thriving cyber criminals
author img

By

Published : Apr 27, 2020, 2:58 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக கோவிட் பரவல் குறித்த தற்போதைய தகவல்களைத் தெரிந்துகொள்ள பொதுமக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுகின்றன.

இந்தப் பெருந்தொற்று சமயத்தில் அச்சத்திலுள்ள மக்களைக் குறிவைக்கும் சைபர் குற்றவாளிகள், அவர்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி பெற முயற்சி எடுத்துவருகின்றனர். மூன்று வாரங்களுக்கு முன், உள் துறை அமைச்சகம் கரோனா காலத்தில் உருவாகியுள்ள போலி தளங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டது. பெரும்பாலும் கரோனா என்ற வார்த்தையுடன் -map, -realtime, -status போன்ற வார்த்தைகளைச் சேர்த்து புதிய போலி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கரோனாவைப் பயன்படுத்தி சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட போலி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேசிய சைபர் பாதுகாப்பு அலுவலர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த் கூறியுள்ளார்.

கரோனா குறித்து புதியத் தகவல்களை அனுப்பும் சைபர் குற்றவாளிகள் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க உள்ளதாகவும் மின்னஞ்சல் அனுப்புகின்றனர். இந்த மின்னஞ்சலைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

கோவிட்-19 பாதிப்பிற்குப் பின் இணையக் குற்றங்கள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. ஊரடங்கால் வீட்டில் சிக்கியுள்ள மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள், அவர்களிடமிருந்து பணத்தைப் பெற முயல்வதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சமீபத்தில் கூறினார். இது தற்போதைய நிலைமையின் தீவிரத் தன்மையை உணர்த்தும்.

இந்த சைபர் குற்றங்களைத் தடுக்க சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வல்லுநர்கள் முயற்சி எடுத்துவருகின்றனர். அதே நேரத்தில் வீட்டிலிருக்கும் மக்களிடம் இதுபோன்ற சைபர் குற்றங்களுக்கு ஏமாறக் கூடாது என்ற விழிப்புணர்வையும் நாம் பரப்ப வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் 'Wanna Cry' என்ற பெயரில் சைபர் குற்றவாளிகள் நடத்திய இணையத் தாக்குதலால் 175-க்கும் மேற்பட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.

அதே நேரத்தில் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்க, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான டெபிட் கார்டு தகவல்களை சைபர் குற்றவாளிகள் வெளியிட்டனர்.

அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளின் அரசு இணையதளங்களும் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகின. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் வேலைகளைச் செய்துவருகின்றனர்.

வீட்டிலுள்ள கணினிகளும், மடிக்கணினிகளும் அலுவலகத்திலுள்ள கணினிகளைப் போலப் பாதுகாப்பானது இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இச்சமயத்தில் பாதுகாப்பற்ற முறையில் இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் போலி லிங்குகளை க்ளிக் செய்வதன் மூலமும் பல முக்கியத் தகவல்கள் சைபர் குற்றவாளிகளிடம் செல்லும்.

ஜூம் செயலியைப் பயன்படுத்திய இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களின் கணினிகளை ஹேக்செய்த சைபர் குற்றவாளிகள் அவர்களிடமிருந்து பெரும் தொகையை பிட்காயினாகக் கேட்டதும் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தக் கரோனாவைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மக்களின் கணினி, ஸ்மார்ட்போன்களிலிருந்து முக்கியத் தகவல்களைத் திருடுகின்றனர். அதை வைத்து அவர்களது வங்கிக் கணக்குகளை காலி செய்கின்றனர்.

சமீபத்தில் PM CARES Fund எனப்படும் பிரதமரின் கரோனா நிவாரண நிதியின் பெயரில் சிறு மாற்றங்களுடன் போலி இணைப்புகளைப் பரப்பி, அதன்மூலம் சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றியதே இதற்கு ஒரு பெரும் சாட்சி.

சமீபத்தில் உலகில் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை 400 மில்லியன் டாலருக்கு இணையத்தில் விற்ற நபர், அந்த தொகையை குஜராத் மாநில அரசின் கரோனா நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

அந்த நபர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் இலவசமாகத் திரைப்படங்களைக் காணுங்கள் மொபைல் போனை இலவசமாக ரீ-சார்ஜ் செய்யுங்கள் உள்ளிட்டவற்றால் ஏமாறும் பொதுமக்களும் சைபர் குற்றவாளிகளின் இந்தப் போலி லிங்கை பலருக்குப் பகிர்கின்றனர்.

அரசின் இணையப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற இணைய பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியும். அதுவரை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதே ஒரே தீர்வாகும்.

இதையும் படிங்க: மருத்துவத் துறையில் சாதிக்கும் இந்திய ரயில்வே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.