உத்தரப் பிரதேச மாநிலம் உன்னோவில் அடுத்த பாலியல் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உன்னோவ் பகுதி அருகேயுள்ள 3 வயது குழந்தையை சம்பவத்தன்று காணவில்லை.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது கயவன் ஒருவன், சிறுமியை வயல் வெளியில் வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பாலியல் குற்றவாளியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உன்னோவ் சட்டமன்ற உறுப்பினர் மீதும் பாலியல் வழக்கு உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு உன்னோவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க : குற்றம் நடைபெறாத நகரம் என உத்ரவாதம் அளிக்க முடியாது: அமைச்சர்.!