ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமாவில் ஷாடூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெளிவந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் அதற்கு பதிலடி கொடுக்கத் தொடங்க, துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
-
#Encounter has started at #Zadoora area of #Pulwama. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Encounter has started at #Zadoora area of #Pulwama. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 28, 2020#Encounter has started at #Zadoora area of #Pulwama. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 28, 2020
முன்னதாக, சோபியன் மாவட்டத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவரை உயிரோடு பிடித்து பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.