இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஹவில்தார் குல்தீப் சிங், பாதுகாப்புப் படை வீரர் சுபம் சர்மா உயிரிழந்தனர்.
அதேபோல், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கர்னெயில் சிங் என்ற வீரர் உயிரிழந்தார். உயிரிழந்த வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
இன்னும் சில நாள்களில் எல்லைப் பகுதியில் பனிக்காலம் தொடங்கிவிடும் என்பதால் அதற்கு முன்னதாக பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் தீவிர முனைப்பு காட்டிவருகிறது. அதன் காரணமாகவே, இந்த அத்துமீறலில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுவருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அடல் சுரங்கம் அமைக்க 9000 டன் இரும்பு - செயில் நிறுவனத்திற்கு அமைச்சர் பாராட்டு