தெலங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியபடியே ஹோட்டலுக்குள் புகுந்தது.
கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் நேர்ந்த இவ்விபத்தில் ஹோட்டலுக்குள் அமர்ந்திருந்த முதியவர் புப்பலா சினராஜப்பா (70) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பூமன்னா (48), பூதேவி இருவரும் பலத்தக் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மது அருந்தியிருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காவல் துறையினர் சிசிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் விபத்து நேர்ந்த ஹோட்டலுக்கு அருகே சிறுவனும், சிறுமியும் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பியது தெரிய வந்தது. இருவரும் இந்த விபத்தை நேரடியாக கண்டுள்ளனர்.