பொருளாதார ரீதியாக நடக்கும் தற்கொலைகளில் பெரும்பாலும் குடும்பத்தோடு இறக்கும் சம்பவங்கள் அதிகமாகவுள்ளன. உளவியல் ரீதியாக இதனை ஃபேமிலிசைட் என்பார்கள். தன் இறப்பிற்குப் பின்பு குடும்பத்தார் மீண்டும் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடாது என்ற அதீத அக்கறையே இதுபோன்ற தற்கொலைகளுக்கு வழி வகுக்கின்றது. பிகாரில் நடந்துள்ள தற்கொலையும் இதே ரகம்தான்.
பிகார் மாநிலம், முபாஃசில் காவல் நிலையப் பகுதியில் வசித்த குடும்பமொன்று பண நெருக்கடியின் காரணமாக தூக்கிலிட்டு தற்கொலைசெய்துள்ளனர். இந்தத் தற்கொலையில் கணவன், மனைவி, ஒரு மகன் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தற்கொலை குறித்து பிகார் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதீத மன அழுத்தம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடல்கள் மீட்கப்பட்டு கதிஹார் சாதர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: இம்ரான் கானுடன் நல்லுறவு தொடர்கிறது - டொனால்ட் ட்ரம்ப்