பிகார் மாநிலம் பாட்னா ஜவஹர்லால் நேரு மார்க் பகுதியில் கட்டுமான தளத்தில் நேற்று (மே 27) எதிர்பாராத விதமாக மூன்று குழந்தைகள் மீது கட்டுமான பொருள் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாவட்ட நீதிபதி ரவிக்குமார் அறிவித்துள்ளார். மேலும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உபேந்திர சர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு