சுமார் 26 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தும் நடந்து வந்த உள்நாட்டுப் போரானது 2009ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்தக் குறிப்பிட்ட காலநிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். போரின் கடைசி காலத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ராஜபக்ச இலங்கை பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றினார்.
இந்நிலையில் இலங்கைப் போரில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கைப் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் இலங்கை போரில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பலர் விடுதலைப் புலிகளால் கட்டாயப்படுத்தப்பட்டு படைகளில் சேர்க்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காணாமல் போனவர்களின் குடும்பத்தினர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களின் நிலை குறித்தும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் இறந்துவிட்டார்கள் என ராஜபக்ச கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - காவல் ஆணையர் தகவல்