பிகார் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரங்ஸ் அங்கம் வகிக்கிறது.
இந்நிலையில் "நீதி, வேலைவாய்ப்பு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக இந்த முறை, மெகா கூட்டணிக்கு வாக்களியுங்கள். பிகார் முதல்கட்ட தேர்தலில் வாக்களிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டமாக 71 தொகுதிகளில், வாக்குப்பதிவு தொடங்கி இன்று நடைபெறுகிறது. இதில், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 42 பேர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 35 பேர், பாஜகவைச் சேர்ந்த 29 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 பேர், இடதுசாரிகள் 8 பேர் உட்பட 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேஜஸ்வி யாதவை முதலமைச்சர் வேட்பாளராக கொண்ட மெகா கூட்டணியில் ஆர்.ஜே.டி 144 இடங்களிலிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், மற்ற கூட்டணி கட்சிகளான சிபிஐ-எம்எல் 9 இடங்களிலும், சிபிஐ 6 இடங்களிலும் சிபிஐஎம் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
பிகார் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ஆம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படயுள்ளன.