அண்டை மாநிலமான கர்நாடகாவின் தார்வார் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர் குட்மல். இவர் அனாதை சடலங்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்யும் ஒரு சிறப்பு நபராக விளங்குகிறார். ஆதலால் இவரை அனைவரும் அறிவார்கள்.
இந்த பணியை இவர் இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். இவர் இந்த பகுதியில் மட்டுமல்ல, ஹீப்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த பணியை தொடர்ந்து வருகிறார்.
பஷீருக்கு உதவியாக அவரின் தந்தை உள்ளார். அப்பகுதியில் அனாதைகள் யாரும் மரணித்து விட்டால் காவலர்கள் அழைக்கும் முக்கிய நபராகவும் பஷீர் விளங்குகிறார். இந்த சமூக சேவையை ஆத்மாத்தமாக செய்து வரும் பஷீர் மதம் பார்ப்பதில்லை.
இதையும் படிங்க: ஆதிக்க சாதியின் தடையால் மயானத்தின் ஒதுக்குப்புறமாக எரிக்கப்பட்ட சடலம்!