ஆதார் எண்ணை சமூக வலை தள கணக்குகளுடன் மத்திய அரசு இணைக்கப்போகிறதா என்று மக்களவையில், நேற்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தனி நபர்களின் விவரங்கள் எவருக்கும் அளிக்கப்படமாட்டாது என்பதன் அடிப்படையிலேயே ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது.
அதனை சமூக வலை தள கணக்குகளுடன் இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. அரசின் ஆதார் தரவுத் தளத்தில் நபரின் பெயர், வீட்டு முகவரி, வயது, பாலினம், பயோமெட்ரிக்ஸ் உள்ளிட்டவை மட்டுமே உள்ளது '' என்றார்.
இதையும் படிங்க: பான் - ஆதார் இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு!