ETV Bharat / bharat

புதுச்சேரியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் கைது!

புதுச்சேரி: வங்கிகளிலிருந்து பணம் எடுத்து வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி நுாதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கும்பலின் தலைவனை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து நான்கு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

thefit-gang-leader-arrested
author img

By

Published : May 8, 2019, 12:39 PM IST

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வங்கிகளிலிருந்து பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு, அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வண்ணம் அரிப்பு பொடி துாவி பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகாபுரத்தைச் சேர்ந்த சாந்திமதி என்பவர் மீது அரிப்பு பொடி தூவி நுாதன முறையில் ரூ.6 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

கொள்ளை கும்பலின் தலைவன் கைது

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நுாதன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் திருச்சியில் நான்கு நாட்கள் முகாமிட்டு, கொள்ளை கும்பலின் தலைவனான முருகானந்தம் என்ற இளைஞரை கைது செய்தனர்.

கைதானவரிடமிருந்து நான்கு லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து காலாப்பட்டிலுள்ள மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், பிடிபட்ட முருகானந்தம் மீது தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி 07.07_5-.2019
புதுச்சேரியில் வங்கிகளிலிருந்து பணம் எடுத்துவருபவர்களிடம் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் அரிப்பு கொடி தூவி கொள்ளையடித்து வந்த கும்பலின் தலைவனை போலீசார் கைது செய்து 4 லட்ச ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். 
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வங்கியிலிருந்து பணம் எடுத்து வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகாபுரத்தை சேர்ந்த சாந்திமதி என்பவர் மீது அரிப்பு பொடி தூவி ரூ.6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்து மேட்டுபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த மூன்று பேர் கொண்ட  கும்பல் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனிபடை போலீசார் திருச்சியில் 4 நாட்களாக முகாமிட்டு , கொள்ளைகும்பலின் தலைவனான முருகானந்தம் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து  4 லட்சம் ரொக்க பணத்தையும்  பறிமுதல் செய்து காலப்பட்டிலுள்ள மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கைதான முருகானந்தம் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

TN_PUD_1_7_THIFT ARESST_7205842
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.