இந்திய அலுவலர்களும், ராணுவ வீரர்களும் பாகிஸ்தானியர்களை இந்திய எல்லையிலிருந்து விரட்டுவதற்கான பெரும் சவால்களை எதிர்கொள்வதில் முன்மாதிரியான துணிச்சல், மனவலிமை மற்றும் உறுதியைக் காட்டினர். அவ்வாறு செய்யும் போது, சிலர் நாட்டிற்காக தங்கள் உயிரைக் கொடுத்து மிக உயர்ந்தத் தியாகத்தை செய்தனர்.
துணிச்சல் மிக்க செயல்களை செய்பவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பரம் வீர் சக்ராவாகும். கார்கில் போரின் போது, சிறப்பாக செயல்பட்டதற்காக 2 உயர் மட்ட அலுவலர்கள் மற்றும் 2 வீரர்கள் என, மொத்தம் 4 இளம் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
கிரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ்
"தி டைகர் ஹில்"லை கைப்பற்றுவதில் முக்கியப் பங்கு வகித்த அவர், நாட்டின் மிக உயர்ந்த துணிச்சலான விருதான பரம் வீர் சக்ராவால் கெளரவிக்கப்பட்டார்.
- கட்டாக் கமாண்டோ படைப்பிரிவின் முன்னணி பிரிவின் ஒரு பகுதியாக இருந்த கிரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ், ஜூலை 3/4, 1999 இரவு டைகர் ஹில்-லை கைப்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
- 16,500 அடி உயரத்தில் இருந்த உச்சியை அடையும் வழி செங்குத்தான, பனி எல்லை மற்றும் பாறைகளால் ஆனது. அவர் தானே முன்னின்று தாக்குதலை வழிநடத்தி, தனது படையின் மற்றவர்கள் பின்பற்றுவதற்காக ஒரு கயிற்றையும் பொருத்தினார்.
- எதிரிகளே ஆச்சரியப்படும் விதத்தில் கட்டாக் பிரிவினர் உச்சியை அடைந்தனர். அவரது படை, உச்சியை அடைந்ததைக் கண்ட எதிரிகள் அதிவேக தானியங்கி இயந்திர துப்பாக்கி, கையெறி மற்றும் ராக்கெட் வீச்சு ஆகியவற்றைப் பயன்படுத்தி யோகேந்திர சிங் யாதவின் படைத் தளபதியையும் இரண்டு வீரர்களையும் கொன்றனர்.
- படைப்பிரிவு மேலும் முன்னேற்ற முடியாமல் ஸ்தம்பித்தது.
- நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த யோகேந்திர சிங் யாதவ், எதிரிகளின் தாக்குதலை நிறுத்துவதற்காக எதிரி நிலைக்கு ஊர்ந்து சென்று பல குண்டு காயங்களுக்கு ஆளானார்.
- எதிரி தோட்டாக்களின் காரணமாக, அவரது உடலின் காயங்களைப் பொருட்படுத்தாமல் அபார துணிச்சலுடன், எதிரியின் தற்காலிக அரணை நோக்கி நகர்ந்து உள்ளே கையெறி குண்டுகளை வீசியும், இடைவிடாத துப்பாக்கிச் சூடும் நடத்தினார்.
- அந்த நெருக்கமான போரில் நான்கு பாகிஸ்தான் வீரர்களை கொன்று எதிரிகளின் தானியங்கி துப்பாக்கி சுடுதலை நிறுத்தினார்.
- இந்த நடவடிக்கையிலும், எதிர் தாக்குதலை முறியடிக்கும் போதும், கிரெனேடியர் யாதவின் இடது கை மற்றும் வலது கால் தாக்கப்பட்டது.
- அதைப்பற்றி கவலைப்படாமல், அவர் இன்னொரு தற்காலிக அரணை அழிக்க முன்னோக்கி சென்றார். இந்த அச்சமற்ற தைரியமான முயற்சியால் ஈர்க்கப்பட்ட, கட்டாக் படைப்பிரிவின் எஞ்சியவர்கள் பழிவாங்கும் உணர்வுடன் எதிரியின் நிலையின் மீது பாய்ந்து டைகர் ஹில்ஸ் உச்சியைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர்.
ரைபிள் மேன் சஞ்சய் குமார்
மாஷ்கோ பள்ளத்தாக்கில் பாயிண்ட் 4875ஐ கைப்பற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தவர்
- ரைபிள் மேன் சஞ்சய் குமார், ஜூலை 4, 1999 அன்று மாஷ்கோ பள்ளத்தாக்கில் பாயிண்ட் 4875-ல் உள்ள பிளாட் டாப் பகுதியைக் கைப்பற்றும் பணியில் தாக்குதல் வரிசையின் முன்னணி வீரராக பணிபுரிந்து வந்தார்.
- ஒரு எதிரிகள் தற்காப்பு அரணிலிருந்து தானியங்கி துப்பாக்கி சூடு நடத்தி கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தி படை வரிசையின் முன்னேற்றத்தை நிறுத்தியது. ரைபிள்மேன் சஞ்சய் குமார், எதிரி தற்காப்பு அரணை தனது தனிப்பட்ட பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் தாக்கினார்.
- அடுத்தடுத்து நடந்த நேருக்கு நேர் மோதலில், அவர் மூன்று பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றார், மேலும் அவர் பலத்த காயமடைந்தார்.
- இருப்பினும், அவருக்கு காயங்கள் இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து போராடி, தாக்குதலில் குறுக்கிட்ட இரண்டாவது தற்காப்பு அரணை தாக்கினார்.
- எதிரி சம்பவ இடத்திலிருந்து ஒரு இயந்திர துப்பாக்கியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
- ரைபிள்மேன் சஞ்சய் குமார் அவரது காயங்களிலிருந்து பெருமளவில் ரத்தப்போக்கு கொண்டிருந்தாலும், அவர் வெளியேற மறுத்துவிட்டார்.
- அவரது நடவடிக்கைகள் அவரது படையினரை எதிரிகளிடமிருந்து பிளாட் டாப் பகுதியைக் கைப்பற்ற தூண்டின.
- ஒரு முக்கியமான நிலையைக் கைப்பற்ற, கடும் தடைகளுக்கு எதிரான அவரது மிகச்சிறந்த துணிச்சலுக்காக, ரைஃபிள்மேன் சஞ்சய் குமாருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த துணிச்சலுக்கான விருதான பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டது.
கேப்டன் விக்ரம் பாத்ரா
- ஜூலை 7, 1999 அன்று, கேப்டன் விக்ரம் பாத்ரா பாயிண்ட் 4875க்கு வடக்கே உள்ள பகுதியில் 13 ஜே.ஏ.கே ரைபிள்களின் நடவடிக்கைகளில் குறுக்கிடும் எதிரிகளிடமிருந்து மீண்டும் கைப்பற்ற ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டார்.
- பெரிதும் வலுவான படையை அழிக்க ஒரு குறுகிய பாறை வழியாக சென்று தாக்குதல் நடத்த வேண்டி இருந்தது.
- தனிப்பட்ட முறையில் தாக்குதலுக்கு முன்னேறிய கேப்டன் பாத்ரா, மிகக் குறுகிய தூரத்தில் எதிரிகளுடன் மோதினார்.
- தாக்குதலின் போது, அவர் கடுமையான காயங்களுக்கு ஆளான போதும் பின்வாங்க மறுத்துவிட்டார்.
- அவர் தனது ஆட்களை அணிதிரட்டி, தாக்குதலை அதிகப்படுத்தி, இராணுவ ரீதியாக சாத்தியமில்லாத பணியாகத் தெரிந்ததை அடைவதில் வெற்றி பெற்றார்.
- அச்சமற்ற தன்மை மற்றும் உண்மையான தைரியத்தின் இந்த அசாதாரண செயலால் ஈர்க்கப்பட்ட துருப்புக்கள், எதிரிகளை வென்று அவரது நிலையை கைப்பற்றின. குறிக்கோளைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் நாட்டிற்காக தனது உயிரைக் கொடுத்தார்.
- ஜூன், 20 1999 அன்று, கேப்டன் விக்ரம் பாத்ரா, டிராஸ் துறையில் பாயிண்ட் 5140-ல் எதிரிகளின் நிலைகளை உடல் ரீதியாகத் தாக்குவதற்கு, முன்னால் இருந்து வழிநடத்துவதன் மூலம் ஸ்டெர்லிங் தலைமைத்துவ குணங்களை வெளிப்படுத்தினார். பாயிண்ட் 5140ஐ மீண்டும் கைப்பற்றுவதில் அவரது வீர சாசகங்களுக்குப் பிறகு, பாத்ரா கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
- அவர் ஒரு துணிச்சலான தாக்குதலைத் தொடங்கி, நான்கு ஊடுருவிய நபர்களை தனிப்பட்ட முறையில் கொன்றார்.
- கேப்டன் விக்ரம் பத்ராவுக்கு, மரணத்திற்குப் பின் இந்தியாவின் மிக உயர்ந்த துணிச்சலுக்கான விருதான பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டது.
அவரது பிரபலமான மேற்கோள்கள்
- ஒன்று நான் மூவர்ண கொடியை ஏற்றிய பின் திரும்பி வருவேன் அல்லது அது என் மேல் போர்த்தப்பட்டு திரும்பி வருவேன், ஆனால் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்.
- இன்னும் அதிகமாக விரும்புகிறேன்
லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே
- 1/11 கூர்கா ரைபிள்ஸ்-ன் இளம் அதிகாரியான லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, கலூபரில் நடந்த தாக்குதல்களில் தைரியமாக அச்சமின்றி பங்கேற்றார்.
- ஜூலை 2-3, 1999 இரவு, பல மணிநேரங்கள் நீடித்த கடினமான மலைஏறுதலுக்குப் பிறகு அவரது படைப்பிரிவு அதன் இறுதி கட்டத்தை நெருங்கியபோது, அது சுற்றுப்புற உயரங்களிலிருந்து கடுமையான, தீவிரமான எதிரிகளின் தாக்குதலை எதிர்கொண்டது.
- குறுக்கிடும் எதிரி நிலைகளை அழிக்க மனோஜின் படைப்பிரிவு பரிந்துரைக்கப்பட்டு, அவர் தனது படைப்பிரிவை விரைவாக ஒரு சாதகமான நிலைக்கு நகர்த்தி வலதுபுறத்தில் இருந்து பாகிஸ்தான் தற்காலிக அரண்களை அழிப்பதற்கு ஒரு பகுதியை அனுப்பினார்.
- இடது புறமிருந்து தாக்குதல் வரத் தொடங்கவே, அவரே மற்ற நான்கு எதிரிகளின் தற்காலிக அரண்களை அழிக்கத் தொடங்கினார்.
- தோட்டா மழைக்குப் பயப்படாமல் முதல் அரண் வரை அச்சமின்றி முன்னேறிய அவர், இரண்டு எதிரி வீரர்களைக் கொன்று, இரண்டாவது அரணை தாக்குவதற்கு முன்னேறினார்.
- மேலும் இரண்டு எதிரி வீரர்களைக் கொன்று அதை அழித்தார்.
- மூன்றாவது அரணை அழிக்கும் போது, எதிரிகளின் துப்பாக்கி சூட்டினால் மனோஜ் தோள் பட்டை மற்றும் கால்களில் காயமடைந்தார்.
- அச்சமின்றி, தனது கடுமையான காயத்தைப் பற்றி கவலைப்படாமல், இந்த உற்சாகமான இளம் அதிகாரி நான்காவது அரணின் மீதான தாக்குதலை தனிப்பட்ட முறையில் நடத்தி, தனது படையினர் முன்னேற வழி ஏற்படுத்தினார்.
- அவர் மிக அருகில் இருந்து நெற்றியில் ஒரு இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் இறப்பதற்கு முன்பு கையெறி குண்டுகளை உள்ளே எறிந்து அந்த அரணை அழிப்பதில் வெற்றி பெற்றார்.
- இளம் அதிகாரியின் இந்த துணிச்சலான செயல் கூர்காக்களுக்கு முக்கியமான முன்னேறக்கூடிய பாதுகாப்பான நிலையை வழங்கி, இறுதியாக கலூபரைக் கைப்பற்ற வழிவகுத்தது.
- அவரது இந்த துணிச்சலான செயல்களுக்காக லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டேவுக்கு பரம் வீர் சக்ரா வழங்கப்பட்டது.
அவரது புகழ்பெற்ற மேற்கோள்: நான் எனது வீரத்தை நிரூபிப்பதற்கு முன்பு மரணம் தாக்கினால், நான் மரணத்தை கொன்றுவிடுவேன் என்று சத்தியம் செய்கிறேன் - கேப்டன் மனோஜ் குமார் பாண்டே பி.வி.சி 1/11 கூர்க்கா ரைபிள்ஸ்
இந்தப் பணிக்கு அவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, சேவைகள் தேர்வு வாரியம் (SSB) நேர்காணலின் போது, நேர்காணல் செய்பவர் அவரிடம், “நீங்கள் ஏன் இராணுவத்தில் சேர விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர் உடனடியாக பதிலளித்தார், "நான் பரம் வீர் சக்கரத்தை வெல்ல விரும்புகிறேன்." அவரது வார்த்தைகளுக்கு உண்மையாக, கேப்டன் மனோஜ் குமார் பாண்டே நாட்டின் மிக உயர்ந்த துணிச்சலுக்கான கெளரவத்தை வென்றார், ஆனால் மரணத்திற்குப் பின்.
இதையும் படிங்க: கார்கில் போர்: பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியில் வென்ற இந்தியா